Sunday, October 08, 2006

கிராமத்து அரட்டை அரசியல் - 2

நண்பர் (கிராமத்து அரசியல் அரட்டை) கி.அ.அ.அனானி, என் மேல் கோபமாக உள்ளார் என்ற விஷயம் இன்று மெயில் மூலம் தெரிய வந்தது ! அவர் எனக்கு 4-5 நாட்களுக்கு முன் அனுப்பிய மேட்டரை நான் பதிப்பிக்காமல் விட்டதால், அவருக்கு கிடைக்க இருந்த "15 நிமிடப் புகழ்" என்னால் பறி போய் விட்டதாம் ;-)

மேட்டர் என்னவென்றால், அனானி அப்போதே, அ·ப்சலை பகத்சிங் ரேஞ்சுக்கு உயர்த்தி யாராவது பேசக் கூடும் என்ற தீர்க்கதரிசனப் பார்வையை , அவர் எனக்கு அனுப்பிய கிராமத்து அரசியல் அரட்டை மேட்டரில் முன் வைத்திருந்தாராம் !!! அவர் அனுப்பிய பழைய மின்மடலை திறந்து பார்த்தவுடன் விளங்கியது, அனானி அவர்கள் கூறியது 100% சரியென்று ! அவர் கோபமும் நியாயமானது என்பதும் தான் ! அனானி நண்பரை, நான் அறியாமல் செய்த தவறுக்காக ஒரு 'பொது மன்னிப்பு' வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் :)

சரி, ஆனது ஆகி விட்டது ! அவர் அனுப்பிய மேட்டர், பதிவாக உங்கள் பார்வைக்கு. என்சாய் :)))

*******************************
"என்னண்ணே...இன்னிக்கு என்னா விசேஷம் " என்றபடி வந்தான் மாயாண்டி

"ஸ்பெசல்லா பீஹாருல கயிறு தயாராகப் போகுதாமேடா " என்றார் மூக்கையன்

'எதுக்குன்ணே..கயிறு..கெணத்துல தண்ணியெறைக்கவா "

"இல்லைடா...பாராளுமன்றத்துல துப்பாக்கி சூடு நடத்த திட்டம் தீட்டினானே, முகமது அப்ஸல் அவனைத் தூக்குல போடச்சொல்லி தீர்ப்பாயிருக்குல்ல...அதுக்குதான் கயிறு"

"போட்ருவாங்களாண்ணே...காஷ்மீர்ல ஒரே கலாட்டாவா இருக்கே....முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் கூட அவனைத் தூக்குல போட்டா பெரும் பிரிவினை வாதப் போராட்டம் நடக்கும் அப்படீன்னு அச்சம் தெரிவிச்சுருக்காரே"

"அச்சப்பட்றவனெல்லாம் எதுக்கு ஆட்சீல இருக்கணும் அப்படீன்னு ஒரு படத்துல வசனம் வருமே அதுதாண்டா ஞாபகம் வருது...அவரு அச்சப்படலடா...அச்சப்படுர மாதிரி அவரு ஆசைய சொல்லியிருக்குறாரு"

"பகத்சிங் கூட ஆங்கில பாராளுமன்றத்துல வெடிகுண்டு வீசுனதுக்கு தான தூக்குல போட்டாங்க..அப்ப கூட ரொம்ப கலவரம் நடந்துரும்னுட்டு யாருக்கும் தெரியாம கமுக்கமா தூக்குல போட்டுருவாங்கன்னு சினிமாவுல காட்டுனாங்களே அந்த மாதிரி போட வேண்டியதுதானே"

"டேய் வெறும்பயலே...விட்டா தீவிரவாதி அப்சலை தேசத் தியாகி பகத் சிங் ரேஞ்சுக்கு ஒசத்திருவ போல இருக்கேடா...இந்த நாயெல்லாம் நடுத்தெருல வச்சுதான் தூக்குல போடணும்" என்றார் கோபமாக.

அப்போதுதான் அங்கு வந்த மணி " இதுல சோகம் என்ன தெரியுமா...தூக்கு தண்டனைய ரத்து செய்யக் கோரி பெண்கள் நடத்துன கண்டன ஆர்ப்பாட்டத்துல ரெண்டு போஸ்டர் பார்த்தம்பா..அதுல ஒண்ணைப் பாத்துதான் ரொம்ப நொந்து போயிட்டேன்"

"அப்படி என்னப்பா எழுதியிருந்தது"

ஒண்ணுல " இந்திய நீதித்துறை ஒரு தலைப் பட்சமா இருக்கு" அப்படீன்னு எழுதியிருந்தது..அதுகூட பரவாயில்லை.... எங்க ஆளுங்களே சில பேரு சொல்ரதுதான்....ஆனா இன்னொண்ணுல " சகோதரர் அப்ஸல்...(நீ செய்த காரியத்தை பார்த்து) உன் சகோதரிகள் பெருமைப்படுகிறோம் " அப்படீன்னு எழுதியிருந்தது.இப்படி பெருமைப்பட்டுக்கிட்டு இருக்குறதெல்லாம் இந்தியாவுக்கு எதிரா சதி செய்யாம வேற என்ன செய்யும்..அதுதாண்ணே கொடுமை...அப்புறம் நாடு எங்கருந்து அமைதிப் பூங்காவா மாறும்"

" பன்னாடைங்க அப்படியா கோசம் போட்டாங்க " என்று வெறி வந்தவராக ஆடிய மூக்கைய்யண்ணனால் அமைதிப் பூங்காவாக இருந்த அந்த இடமே யாரோ தீவிரவாதி பாம் போட்டது போல் களேபரமாக மாறியது.
************************

*** 241 ***

5 மறுமொழிகள்:

Unknown said...

பகத்சிங் வீசிய குண்டில் நாடாளுமன்றத்தில் இருந்த ஒரு செங்கல் கூட பெயரவில்லை. ஒருத்தருக்கும் காயம் ஏற்படவில்லை.

நவீன பகத்சிங் மகாத்மா அப்சல் அவர்கள் செய்த காரியத்தால் 19 பேர் செத்து போனார்கள்

இதெல்லாம் என்ன ஒப்புமை என்று இவர்களை ஒப்பீடு செய்கிறார்கள் பாலா?மனதுக்கு வேதனையாக உள்ளது

enRenRum-anbudan.BALA said...

கருத்துச் சொதந்திரம் தான் ! வேறே என்ன எழவைச் சொல்றது, செல்வன் ! ஜனநாயகமா இருக்கோம் பாருங்க ! நன்றி.
எ.அ.பாலா

said...

"""கி.அ.அ.அனானி, என் மேல் கோபமாக உள்ளார் என்ற விஷயம் இன்று மெயில் மூலம் தெரிய வந்தது ! அவர் எனக்கு 4-5 நாட்களுக்கு முன் அனுப்பிய மேட்டரை நான் பதிப்பிக்காமல் விட்டதால், அவருக்கு கிடைக்க இருந்த "15 நிமிடப் புகழ்" என்னால் பறி போய் விட்டதாம் ;-)

அனானி நண்பரை, நான் அறியாமல் செய்த தவறுக்காக ஒரு 'பொது மன்னிப்பு' வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் :) """""

பொதுமன்னிப்பா...உங்களுக்காக இன்னொரு கயிறு ரெடி பண்ணச்சொல்லி பீஹாருக்கு லெட்டர் போட்டு இருக்குங்கோவ்...:)))

பதிவனுப்பிய அனானி

Muthu said...

கி.அ.அ அனானி விவகாரமான ஆள் போல தெரியலயே..:))

ஆனா தனக்கு கிடைக்கற 15 நிமிச புகழை உங்களுக்கு திருப்பி விடறாரே..அந்த பெருந்தன்மைக்காக அவரை பாராட்டணும்பா...

(

enRenRum-anbudan.BALA said...

கி.அ.அ.அனானி,
//பொதுமன்னிப்பா...உங்களுக்காக இன்னொரு கயிறு ரெடி பண்ணச்சொல்லி பீஹாருக்கு லெட்டர் போட்டு இருக்குங்கோவ்...:)))
//
Not required NOW ;-)

Dear Muthu,
Thanks !
//ஆனா தனக்கு கிடைக்கற 15 நிமிச புகழை உங்களுக்கு திருப்பி விடறாரே..அந்த பெருந்தன்மைக்காக அவரை பாராட்டணும்பா...
//
:)))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails